செய்திகள்
மது விற்பனை - கோப்புப்படம்

கோவை மண்டலத்தில் ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை

Published On 2020-05-17 11:23 GMT   |   Update On 2020-05-17 11:23 GMT
கோவை மண்டலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.33 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
கோவை:

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.

இந்தநிலையில் தமிழக அரசு கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்தது. ஆனால் டாஸ்மாக் கடையில் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளை அரசு பின்பற்றாததால் மீண்டும் கடைகளை அடைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கோவை புறநகர் மாவட்ட பகுதிகளில் 163 டாஸ்மாக் கடைகளும், மாநகர பகுதிகளில் 120 கடைகள் என மொத்தம் 283 கடைகள் திறக்கப்பட்டது. தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 12 கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரு டாஸ்மாக் கடையில் தினமும் 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என்பதால் டோக்கன் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடிமகன்கள் நீண்டவரிசையில் முககவசம் அணிந்து காத்திருந்து டோக்கன் பெற்று மது வாங்கி சென்றனர்.

நேற்று ஒரே நாளில் கோவை வடக்கு பகுதியில் ரூ.9 கோடிக்கும், தெற்கு பகுதியில் ரூ.7 கோடிக்கும் என மொத்தமாக கோவை மாவட்டத்தில் ரூ.16 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 90 டாஸ்மாக் கடைகளில் 60 கடைகள் திறக்கப்பட்டன. அங்கு ஒரே நாளில் ரூ.2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்திற்கு மது விற்பனையானது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை அடக்கிய கோவை மண்டலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.33 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
Tags:    

Similar News