செய்திகள்
கேஎஸ் அழகிரி

நிதி மந்திரி அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றி விட்டது- கே.எஸ்.அழகிரி

Published On 2020-05-16 08:40 GMT   |   Update On 2020-05-16 08:40 GMT
நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு மீண்டும் பட்ஜெட் உரையை படித்ததாகவே தோன்றுகிறது. உடனடி பலனை தராத அறிவிப்புகள் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றமே என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிதி மந்திரி அறிவித்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் எல்லாம் நீண்டகால திட்டங்கள் ஆகும். வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடுகிற விவசாயிகளுக்கு கவர்ச்சி திட்டங்களினால் உடனடியாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

விவசாயிகளின் வங்கி கடன் ரூ. 18 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த நரேந்திர மோடி அரசு, விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய மறுப்பது ஏன்? கார்ப்பரேட்டுகளுக்கு பரிவு காட்டுகிற மோடி விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமா?

நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு மீண்டும் பட்ஜெட் உரையை படித்ததாகவே தோன்றுகிறது. உடனடி பலனை தராத அறிவிப்புகள் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றமே.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக கூட்டுவோம் என்று அறிவித்த பிரதமர் மோடி இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லாத புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் கொரோனா நோயோடு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் எதுவுமே நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. நிதியமைச்சரின் அறிவிப்பை பார்க்கிறபோது இது நிவாரண அறிவிப்பா? நிதியமைச்சரின் படஜெட் உரையா என்று நினைக்க தோன்றுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News