செய்திகள்
முதல்வர் பழனிசாமி

தொழில்துறையினருக்கு மேலும் தளர்வுகள் அளிக்கப்படும்- முதல்வர் பழனிசாமி

Published On 2020-05-15 12:33 GMT   |   Update On 2020-05-15 12:33 GMT
தொழில்துறையினருக்கு தமிழக அரசு மேலும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

மே 17-க்கு பிறகு ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் கொடுத்து தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சிறு குறு தொழில் துறை உட்பட தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனைக்கு பின் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றன. சுமார் 1500 நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வருகின்றனர். மேலும் தொழில்துறையினருக்கு தமிழக அரசு மேலும் படிப்படியாக தளர்வுகளை அளிக்கும். 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வேறு நாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை தமிழகத்துக்குக் கொண்டுவர சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News