செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் இருந்து நோயாளி தப்பியோட்டம்- ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா

Published On 2020-05-15 06:54 GMT   |   Update On 2020-05-15 06:54 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளி தப்பியோடியுள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய 43 வயது நபருக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார். இதனால் அவர் வீடு அமைந்துள்ள சின்மயா நகர் பகுதியில் தேடும் பணி தீவிரயை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News