செய்திகள்
கோப்பு படம்.

ஒரத்தநாடு அருகே காதலிப்பதாக ஏமாற்றி கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

Published On 2020-05-14 12:41 GMT   |   Update On 2020-05-14 12:41 GMT
ஒரத்தநாடு அருகே காதலிப்பதாக ஏமாற்றி கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு காவல் சரகம் வில்வாடி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராஜசேகரன் (வயது 32), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்து வேலைபார்த்துவருகிறார்.

ராஜசேகரன் ஆம்பலாபட்டு கண்டியன் தெருவை சேர்ந்த மதியழகன் என்பவருடய மனைவி தமிழ்செல்வியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவரை கணவரிடம் இருந்து பிரித்து தனியாக குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆம்பலாபட்டு வடக்கு தெருவை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் ராஜசேகரன் கூட்டாக மீன் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது நண்பரின் வீட்டில் உள்ள அவரது உறவினரின் (16வயது) சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து ராஜசேகரை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை அவரது பெற்றோர் தங்கள் உறவினர்கள், சிறுமியின் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து பாப்பாநாடு போலீசில் ராஜசேகரன் அவரது தம்பி வீரசேகர் (29) ஆகியோர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை பதுக்கிவைத்திருந்த இடத்தை கண்டுபிடித்து சிறுமியை மீட்டு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியை இன்று ஒரத்தநாடு நீதிபதிவீட்டிற்கு அழைத்து சென்று நீதிபதி வேலுமயில் முன்பு வாக்குமூலம் பெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுமியை கடத்திசென்ற ராஜசேகரன், அவரது தம்பி வீரசேகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ராஜசேகர் மீது ஒரத்தநாடு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News