செய்திகள்
மழை

குமரியில் பரவலாக மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-05-14 06:47 GMT   |   Update On 2020-05-14 06:47 GMT
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலையில் மழையுமாக தொடர்ந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் முகத்தைக் காண முடியவில்லை. நாள் முழுவதும் குளுமையான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை 22.2, பெருஞ்சாணி 16, சிற்றார்-1 42.2, சிற்றார்-2 6, புத்தன் அணை 15.2, மாம்பழத்துறையாறு 4, முக்கடல் 6.6, பூதப்பாண்டி 18.6, களியல் 6.4, கன்னிமார் 34.2, கொட்டாரம் 5.2, குழித்துறை 11, மயிலாடி 22.2, நாகர்கோவில் 22.2, சுருளக்கோடு 23.6, தக்கலை 15, குளச்சல் 8, இரணியல் 16.4, பாலமோர் 11.2, கோழிப்போர்விளை 23, அடையாமடை 9, குருந்தங்கோடு 4.4, முள்ளங்கினாவிளை 34, ஆனைக்கிடங்கு 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

மழை பெய்து கொண்டிருப்பதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 247 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 126 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 26 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 34 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 2 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால் கல்குளம் தாலுகாவில் ஒரு வீடு பகுதி அளவு சேதம் அடைந்தது.
Tags:    

Similar News