செய்திகள்
வைகோ

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது- மத்திய அரசுக்கு, வைகோ வேண்டுகோள்

Published On 2020-05-13 11:48 GMT   |   Update On 2020-05-13 11:48 GMT
பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு, வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில் நிறுவனங்கள் செயல்படவும், உற்பத்தி ஆலைகளை இயக்கவும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி சந்தோ‌‌ஷ்குமார் கங்வார் கலந்தாய்வு நடத்தியது வரவேற்கத்தக்கது. ஆனால் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தொழிற்துறை கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததால், சுமார் 9 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் பணிக்கு திரும்ப அழைப்பதற்கு பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது. இத்தகைய தொழிலாளர் விரோத கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News