செய்திகள்
ரஜினிகாந்த்

கொரோனா நிவாரண பணி மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் போனில் பாராட்டு

Published On 2020-05-10 12:07 GMT   |   Update On 2020-05-10 12:07 GMT
மன்ற நிர்வாகிகள் ஆங்காங்கே கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருவதை நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அரசு உதவி செய்து வருவதாக அறிவித்தாலும் உணவுக்கு கூட வழியின்றி பலரும் அவதியுற்று வருகின்றனர்.

அவர்களுக்கு அரசியல் கட்சியினரும் தன்னார்வலர்களும் மட்டுமே உதவி வருகின்றனர். ரஜினி காந்த் அரசியல் கட்சி தொடங்க வில்லை என்றாலும் அவருடைய மன்ற நிர்வாகிகளும் ஆங்காங்கே கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இது பற்றி ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் அவ்வப்போது மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

உதவி தொடர்பான தகவல் அனைத்தும் உடனுக்குடன் ரஜினிகாந்துக்கு சொல்லப்பட்டு வருவதாகவும், அவரும் மன்ற நிர்வாகிகளை பாராட்டி வருவதாகவும் உற்சாகமூட்டும் வார்த்தைகளை தெரிவித்துள்ளனர். மேலும் சில மாவட்ட நிர்வாகிகளை ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணி எப்படி செய்யப்படுகிறது, யாருக்கு செய்யப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த ரஜினிகாந்த், கொரோனா பிரச்சினை முடிந்த பிறகும் தேவைப்படும் மக்களுக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த பேச்சால் உற்சாகமான ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக நிவாரண உதவி வழங்கி வருவதாக மன்றத்தினர் கூறுகின்றனர்.

Tags:    

Similar News