செய்திகள்
கொரோனா வைரஸ்

கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரத்தில் மேலும் 61 பேருக்கு நோய்த்தொற்று

Published On 2020-05-07 04:14 GMT   |   Update On 2020-05-07 04:14 GMT
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்டமாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொற்று பரவுகிறது. 

மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கூலித் தொழிலாளர்கள் வசித்து வந்த 12 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  

இதேபோல் சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சின்மயா நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு அருகில் உள்ள பகுதிகளில் கொரோனா பரவுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News