செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை- ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-05-06 12:49 GMT   |   Update On 2020-05-06 12:49 GMT
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் மே 7-ந்தேதி (நாளை) முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைககளை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் நேற்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும். மதுக்கடைகளுக்கு வருவோர் தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு விழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அளித்த பதிலை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்தள்ளது.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்த வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது வைரஸ் பரவ மேலும் ஒரு காரணம் ஆக அமைந்து விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News