செய்திகள்
மு.க.ஸ்டாலின்

அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2020-05-02 07:07 GMT   |   Update On 2020-05-02 07:57 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை  

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் தரவேண்டும்.

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை, மக்களை காப்பற்ற வேண்டியது அரசின் கடமை. கொரோனா சமூகப் பரவலாக மாறி விடாமல் தடுக்க வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. இந்த ஊரடங்கினால் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே முடங்கியிருக்கும் உழைப்பாளி, மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. அரிசி, ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News