செய்திகள்
கோப்பு படம்

பழுது நீக்கும் கடைகளை திறக்க அனுமதிக்க முடியுமா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Published On 2020-04-30 03:50 GMT   |   Update On 2020-04-30 03:50 GMT
வீட்டு உபயோக பொருட்களை பழுது நீக்கும் கடைகளை திறக்க அனுமதிக்க முடியுமா? என தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஜி.ராஜேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால், அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதானால், அதை சரி செய்யும் கடைகள், அதற்கான உதிரி பாகங்களை விற்கும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.

இந்த ஊரடங்கு காலத்தில் 50 லட்சம் செல்போன்கள், 50 ஆயிரம் தொலைக்காட்சி பெட்டிகள், 70 ஆயிரம் பிரிட்ஜ்கள் பழுந்தடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே, வீட்டு உபயோகப் பொருட்கள் சரி செய்யும் கடைகளையும், உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடைகளையும் திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் இந்த கடைகளை திறக்க அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி கேட்டு, இதுகுறித்து வருகிற மே 25-ந்தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News