செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி

Published On 2020-04-29 07:56 GMT   |   Update On 2020-04-29 07:56 GMT
சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பிறகு, உடனடியாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News