செய்திகள்
ரேஷன் கடை

ரேஷன் கடைகளில் ரூ.500 மதிப்பிலான மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு

Published On 2020-04-10 15:13 GMT   |   Update On 2020-04-10 15:13 GMT
ரேஷன் கடைகளில் 500 ரூபாய் மதிப்புடைய 19 பொருள்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

அதன்படி, ரூ.500 மதிப்புள்ள வகையில் அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ உளுத்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, மிளகு 100 கிராம், கடுகு100 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம் மற்றும் டீத்தூள், மஞ்சள் தூள் உப்பு, பூண்டு உள்ளிட்ட 19 பொருட்கள் உள்ளடக்கிய பைகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News