செய்திகள்
தேர்வு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு- பதிவாளர் தகவல்

Published On 2020-04-10 12:02 GMT   |   Update On 2020-04-10 12:02 GMT
கொரேனா வைரஸ் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:

மத்திய பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் விடுமுறை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்லைக்கழகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

எனவே ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதைப்போல திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதாக ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பல்கலைக்கழகம் திறக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News