செய்திகள்
சஸ்பெண்டு

நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு: பெண் விற்பனையாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

Published On 2020-04-08 15:00 GMT   |   Update On 2020-04-08 15:00 GMT
கோவையில் நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை:

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்க தமிழக முதல்- அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 1418 ரேஷன் கடைகள் மூலம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 116 குடும்ப அட்டை தாரர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் ரூ.1000 நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கலெக்டர் ராஜாமணிக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் கோவை மாநகராட்சி பாரி நகர் கடையில் வேலை பார்த்து வந்த ராஜசேகர், வேலாண்டிபாளையத்தில் பணியாற்றிய ராஜன், கோவைப் புதூரில் பணிபுரிந்த லதாபாய் உள்ளிட்ட 3 விற்பனையாளர்களை கலெக்டர் ராஜாமணி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags:    

Similar News