செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு நிதி உதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2020-04-07 12:00 GMT   |   Update On 2020-04-07 12:00 GMT
சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 50 பேர்களுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் சொந்த நிதியை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
சிவகாசி:

சிவகாசி காசி விஸ்வநாதர் கோவில், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோவில், திருத்தங்கல் கருநெல்லிநாதர்சுவாமி கோவில், எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோவில் ஆகிய இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதமும் கோவில் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதமும் மொத்தம் 50 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் நிதி உதவியை தனது சொந்த செலவில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

மேலும் விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராம் ஏற்பாட்டில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், சிவகாசி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், விஸ்வநத்தம் ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரமணா, செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, சிவகாசி நகர பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், சித்து ராஜபுரம் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News