செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை பிரிவு

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-04-07 08:17 GMT   |   Update On 2020-04-07 08:17 GMT
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த மேலும் 2 நபரை கொரோனா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை:

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட பலரும் இப்போது கொரோனா நோய் தொற்றுக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் பட்டியலை சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் தயார் செய்து உள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலரும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் முகாம்களில் சிகிச்சையில் உள்ளனர். இருந்தபோதிலும் ஒரு சிலர் செல்போனை ஆப் செய்து விட்டு தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து சுகாதார சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து மதுரை மாவட்டத்திலிருந்து பங்கேற்றவர்களின் பட்டியலுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் பெரியார் நகரில் உள்ள வீட்டில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 2 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு பெரியார் நகருக்கு ஆம்புலன்சில் வந்தனர். அங்கு வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News