செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்த போது எடுத்த படம்.

பள்ளித்தேர்வுகள் குறித்து பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-04-06 08:30 GMT   |   Update On 2020-04-06 19:12 GMT
தமிழகத்தில் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பள்ளித்தேர்வுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-

தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமலே கொரோனா வருவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாங்களாகவே வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு தேடிச்சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்குவது கடினமானது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 94 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு மற்றும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 72 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித்தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும்

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News