செய்திகள்
மருத்துவமனையில் நடைபெறும் சிகிச்சை - கோப்புப்படம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் 115 பேர் அனுமதி

Published On 2020-04-05 14:18 GMT   |   Update On 2020-04-05 14:18 GMT
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 96 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 115 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் தொடர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்படுபவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றுவரை 96 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 115 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சளி மாதிரி எடுத்து திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுக்காக டாக்டர்கள் காத்திருக்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகம் திருவாரூரில் உள்ளது. இதேபோல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் அமைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது.
Tags:    

Similar News