செய்திகள்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-04-05 14:01 GMT   |   Update On 2020-04-05 14:01 GMT
தமிழகத்தில் இதுவரை 571 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 31-ந்தேதியில் இருந்து 57, 110, 75, 81, 74, 86 என உயர்ந்துள்ளது. இன்றுடன் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 522 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள்.

ஏப்ரல் 3-ந்தேதி தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக இருந்து. 4-ந்தேதி 74 அதிகரித்து 485 ஆக அதிகரித்தது. இன்று 85 அதிகரித்து 571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

1. சென்னை - 95
2. கோவை - 58
3. திண்டுக்கல் - 45
4. திருநெல்வேலி - 38
5. ஈரோடு - 32
6. நாமக்கல் - 25
7. ராணிபேட்டை - 25
8. தேனி - 23
9. கரூர் - 23
10. செங்கல்பட்டு - 22
11. மதுரை - 19
12. திருச்சி - 17
13. விழுப்புரம் 15
14. திருவாரூர் - 12
15. சேலம் - 12
16. திருவள்ளுர் - 12
17. விருதுநகர் - 11
18. தூத்துக்குடி - 11
19. நாகப்பட்டினம் - 11
20. திருப்பத்தூர் - 10
21. கடலூர் - 10
22. திருவண்ணாமலை - 08
23. கன்னியாகுமரி - 06
24. சிவகங்கை - 05
25. வேலூர் - 05
26. தஞ்சாவூர் - 05
27. காஞ்சிபுரம் - 04
28. நீலகிரி - 04
29. திருப்பூர் - 03
30. ராமநாதபுரம் - 02
31. கள்ளக்குறிச்சி - 02
32. பெரம்பலூர் - 01
Tags:    

Similar News