செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கட்டுமான தொழிலாளர்களுக்கும் ரூ.1000-இலவச பொருட்கள் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2020-04-03 11:48 GMT   |   Update On 2020-04-03 11:48 GMT
தமிழ்நாட்டில் சிக்கித்தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ரூ.1000 மற்றும் இலவச பொருட்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை நிவாரணமாக, தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற ஓட்டுநர்களுக்கும் தலா ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கிடவும்.

தற்போது தடை உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் சிக்கித்தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணை வழங்கிடவும், சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதையடுத்து பதிவு பெற்ற 12,13,882 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், பதிவு பெற்ற 83,500 அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கும் தலா ரூ. 1000 வழங்கிட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்படி தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அவர்களுக்கு உரிய தொகை மாவட்டந்தோறும் அனுப்பிவைக்கப்பட்டு அத்தொழிலாளர்களின் வங்கி கணக்கில் உடனே பட்டு வாடா செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணை அடங்கிய பை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News