செய்திகள்
கோப்புபடம்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.14 கோடி - போக்குவரத்து துறை பணியாளர்கள்

Published On 2020-04-03 02:40 GMT   |   Update On 2020-04-03 02:40 GMT
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு போக்குவரத்து துறை பணியாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் ரூ.14 கோடி வழங்குகிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்:

கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூரில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 36 பேர், அவர்களுடைய உறவினர்கள் 3 பேர் சேர்த்து 39 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பயன்படும் வகையிலான பாதுகாப்பு உடை, கரூர் மாவட்டத்தில் 2 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரூருக்கு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட உடைகள் ஆர்டர் வழங்கப்பட்டு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1 கோடி தமிழக அரசின் மூலம் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. 5 புதிய வெண்டிலேட்டர் கருவிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 7 வென்டிலேட்டர்கள் இருப்பில் உள்ளது. போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.14 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 938 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, அதேபோல கரூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். விரைவில் அந்த நிதி முதல்- அமைச்சரிடம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News