செய்திகள்
வெற்றிலை

பெரியகுளம் பகுதியில் அறுவடை செய்யப்படாமல் வீணாகும் வாழைத்தார், வெற்றிலை

Published On 2020-04-02 17:10 GMT   |   Update On 2020-04-02 17:10 GMT
கடந்த 10 நாட்களாக சரக்கு போக்குவரத்து இல்லாத காரணத்தால் பெரியகுளம் பகுதியில் அறுவடை செய்யப்படாமல் வெயிலில் வாழைத்தார், வெற்றிலை சாய்ந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரியகுளம்:

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பெரியகுளம் தாமரைக்குளம் கைலாசபட்டி, வடுகபட்டி மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வாடிப்பட்டி, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 8000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் நடந்து வருகிறது. 

விவசாயிகள் கடந்த 10 நாட்களாக சரக்கு போக்குவரத்து இல்லாத காரணத்தாலும் வெளி மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வராததால் வாழைக்காய் தேக்கம் அடைந்துள்ளன. முழுமையாக தனது முதிர்ச்சியடைந்து  கோடை வெயிலில் சாய்ந்து  கிடக்கின்றன. 

இதேபோன்று மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம், நல்ல கருப்பன் பட்டி, அழகர் நாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் வெற்றிலை விவசாயிகள் சுமார் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதாவது வாரத்திற்கு நான்கு முறை வெற்றிலை கொள்வது வழக்கம். அதுவும் கடந்த 10 நாட்களாக இல்லாமல் கொடியிலே வெற்றிலைகள் வாடி வதங்கி காய்ந்து வீணாவதையும் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News