செய்திகள்
விண்ணப்பம்

தேனி மாவட்டத்தில் அவசர தேவைக்கு வெளியூர் செல்வோர் விண்ணப்பிக்கலாம்

Published On 2020-04-02 16:29 GMT   |   Update On 2020-04-02 16:29 GMT
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் தேனி மாவட்டத்தில் அவசர தேவைக்கு வெளியூர் செல்வோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி

கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடத்திடும் விதமாக சமூக தனிமைபடுத்தலை தீவிரபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் திருமணம் மற்றும் இறப்பு போன்ற சமூக நிகழ்வுகளுக்காகவும், அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு அனுமதி வழங்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் நபர்கள் அந்தந்த பகுதி தாசில்தார்களிடமும், தேனி மாவட்டத்துக்கு வெளியே பயணம் செய்ய வேண்டியுள்ள நபர்கள் மாவட்ட கலெக்டரிடமும் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 80999 14914 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து வரப்பெறும் லிங்க் வழியாகவோ அல்லது https:\\epasskki.in\ என்ற இணையதளத்தின் மூலமோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் அனைத்து சூழ்நிலைகளிலும் கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடித்தல் போன்றவற்றை கையாண்டு நோய் தொற்று பரவுதலை தடுக்குமாறும் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News