செய்திகள்
குடிநீர்

கோடைகாலம் தொடங்கியதால் சென்னையில் விரைவில் குடிநீர் சப்ளை அதிகரிப்பு

Published On 2020-04-02 11:47 GMT   |   Update On 2020-04-02 11:47 GMT
கோடைகாலம் தொடங்கியதால் சென்னை நகருக்கு நாள் தோறும் வழங்கும் குடிநீர் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

நெம்மேலி சுத்திகரிப்பு மையத்தில் கடந்த 16-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கு நீர் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்றுடன் தொழில்நுட்ப மேம்பாட்டு பணி முடிவடைகிறது. தற்போது சென்னை நகருக்கு நாள்தோறும் 650 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சென்னை நகருக்கு நாள் தோறும் வழங்கும் குடிநீர் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் நாள்தோறும் சென்னை நகருக்கு சப்ளை செய்யப்படுகிறது. நெம்மேலியில் பணிகள் முடிவடைந்ததால் குடிநீர் சப்ளை அதிகரிப்பதில் சிரமம் இருக்காது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தண்ணீர் உயர்தரத்தில் சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிநீர் குறைவான அளவில் பயன்படுத்தபடுகிறது. அதே நேரத்தில் வீடுகளுக்கான குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை ஜூன் மாதம் வரை தேவையான குடிநீரின் அளவு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News