செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்துதல் திட்டம்: இதுவரை 6.88 லட்சம் பேரிடம் ஆய்வு - தமிழக அரசு தகவல்

Published On 2020-04-02 05:03 GMT   |   Update On 2020-04-02 05:03 GMT
கொரோனா தோற்று கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இதுவரை 6 லட்சத்து 88 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா தோற்று கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இதுவரை 6 லட்சத்து 88 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாகவும், இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கிலும் தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டம் (கண்டெய்ன்மெண்ட் பிளான்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ராணிப்பேட்டை, தஞ்சை, வேலூர், கோவை, விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், நெல்லை, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சீபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 698 களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 815 வீடுகளில், 6 லட்சத்து 88 ஆயிரத்து 473 பேரிடம் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News