செய்திகள்
கிருமி நாசினி கருவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பீலா ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை- கிருமிநாசினி தெளிக்க 5 ஆயிரம் புதிய கருவிகள்

Published On 2020-04-01 10:01 GMT   |   Update On 2020-04-01 10:01 GMT
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க 5 ஆயிரம் ஸ்பிரையர் வாங்கப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க 5 ஆயிரம் ஸ்பிரையர் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 1,500 பவர் ஸ்பிரேயர் கருவிகளும் வாங்கப்பட்டு 43 சுகாதார மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

கிருமிநாசினி தெளிப்பதற்கு உள்ளாட்சி துறை மூலம் 6,500 ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News