செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் (கோப்புப்படம்)

மதுரை மாநகரில் 2 நாட்களில் மட்டும் 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2020-04-01 07:17 GMT   |   Update On 2020-04-01 07:17 GMT
தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் சட்டத்தை மீறியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை:

மதுரை மாநகரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறுவோர் மீது மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அழகர்கோவில் மெயின்ரோடு- சர்வேயர் காலனி சந்திப்பில் வாகன தணிக்கை நடத்தினார்.

அப்போது சூர்யா நகர் சுப்பையா தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 27), ஜவகர்லால்புரத்தை சேர்ந்த ரமேஷ் (25), ராமவர்மா நகரை சேர்ந்த மகேந்திரன் (39) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர்.

இதையடுத்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தேவையின்றி சுற்றித்திரிந்தது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாநகரை பொறுத்தவரை கடந்த 2 நாட்களில் மட்டும் 144 தடை சட்டத்தை மீறியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 179 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தடையை மீறிய சுற்றியதாக ரூ. 73 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News