செய்திகள்
இந்தியா, சீனா கொடி

கடும் மந்தநிலையை நோக்கி நகரும் உலகம்: இந்தியா, சீனா தப்பிக்க வாய்ப்பு

Published On 2020-04-01 03:31 GMT   |   Update On 2020-04-01 03:31 GMT
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவும், சீனாவும் மட்டும் அதில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று கூறி உள்ளது.
சென்னை :

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவும், சீனாவும் மட்டும் அதில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று கூறி உள்ளது. அந்த ஆய்வறிக்கை கூறுவதாவது:- உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் அநேகமாக நின்றுவிட்ட நிலையில் நடப்பு ஆண்டில் மொத்த உலகத்திலும் கடும் பொருளாதார தேக்கநிலை உருவாகும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் விளைபொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2-3 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.150-225 லட்சம் கோடி) அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்த நாடுகள் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு 2.5 லட்சம் கோடி டாலர் தேவைப்படும். இதிலிருந்து விதி விலக்காக சீனாவும், இந்தியாவும் மட்டும் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.முன்னேறிய நாடுகளும், சீனாவும் அண்மை காலத்தில் தமது பொருளாதாரத்தை புனரமைப்பதற்காக பெரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இவ்வாறு ஐ.நா. வர்த்தக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News