செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க் கடன் செலுத்த அவகாசம்- முதல்வர் பழனிசாமி

Published On 2020-03-31 12:44 GMT   |   Update On 2020-03-31 13:41 GMT
கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க் கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலாலை இன்று நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசதம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் / வாரிய தவணைத் தொகை செலுத்வதற்கும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகனை fc புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம்  செலுத்த 3 மாதம் அவகாசம். வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகைத் தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு. மீனவவசதி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்ததவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிப்காட் நிறுவனத்திடம் கடன் பெற்ற நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News