செய்திகள்
மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி.

இன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு

Published On 2020-03-31 09:49 GMT   |   Update On 2020-03-31 09:49 GMT
இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டித்து தற்காலிக பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுநலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

Similar News