செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை

Published On 2020-03-29 18:35 GMT   |   Update On 2020-03-29 18:35 GMT
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு 199 நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.  இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1,120 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவு வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு உத்தரவை சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
Tags:    

Similar News