செய்திகள்
வேப்பிலை

வேப்பிலைக்கு திடீர் கிராக்கி ஒரு கட்டு ரூ.20க்கு விற்பனை

Published On 2020-03-29 10:44 GMT   |   Update On 2020-03-29 10:44 GMT
கொரோனா வைரஸ் பீதியால் வேப்பிலைக்கு திடீரென கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டு ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம்:

வேப்பிலைக்கு இயற்கையாகவே மருத்துவ குணம் உண்டு. சிலர் வேப்பிலை மற்றும் வேப்பிலைப் பூக்களை பச்சடி செய்தும், ரசமாக செய்தும் சாப்பிட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் பீதியால் தற்போது வேப்பிலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

கிராமங்களில் உள்ளவர்கள் வேப்பிலையை இலவசமாக பறித்து தருகிறார்கள். ஆனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நகர பகுதிகளில் உள்ளவர்கள் வேப்பிலையை விலை கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மார்க்கெட்களில் ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

சிலர் இந்த வேப்பிலையை வீடுகளில் கட்டித் தொங்க விட்டுள்ளனர். சிலர் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தெளித்துவிட்டு அந்த வேப்பிலை இலைகளை தூவி உள்ளனர்.

Tags:    

Similar News