செய்திகள்
குடிநீர் கேன்கள்

கொரோனா தடை காரணமாக காலை, மாலை 2 மணி நேரம் குடிநீர் நிறுவனங்கள் திறப்பு

Published On 2020-03-29 08:06 GMT   |   Update On 2020-03-29 08:06 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக குடிநீர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த தண்ணீர் கம்பெனிகள் நாள் முழுவதும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கும் நேர கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

குடிநீர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த தண்ணீர் கம்பெனிகள் நாள் முழுவதும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கும் நேர கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் கம்பெனி அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் குடிநீர் எடுக்கும் வகையில் காலை 7மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் குடிநீர் கேன்கள் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.

இதேபோல் குடிநீர் கேன்கள் விற்பனை செய்யும் லாரிகளுக்கான சப்ளை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த குடிநீர் வினியோகிக்கும் நேரம் ஒவ்வொரு தண்ணீர் கம்பெனிகளிலும் மாறுபடலாம் என்றும் குடிநீர் கேன்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்புகளையும் தண்ணீர் கம்பெனிகளின் வாசலில் ஒட்டியுள்ளனர்.
Tags:    

Similar News