செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

Published On 2020-03-28 13:08 GMT   |   Update On 2020-03-28 13:08 GMT
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40 லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கான  மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா சிகிச்சைக்காக 17, 000 படுக்கைகள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 மாவட்டங்களிலும் வீடு வீடாகச் சென்று இருமல், சளி காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படும். லேசான அறிகுறி இருக்கும்பட்சத்தில் மாஸ்க் போன்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News