செய்திகள்
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்

தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் - தஞ்சை கலெக்டர் தகவல்

Published On 2020-03-28 10:34 GMT   |   Update On 2020-03-28 10:34 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலிருந்தே தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வீட்டுக்கே நேரடியாக கொண்டு வந்து விநியோகம் செய்ய சில மளிகைகடைகள் தயாராக உள்ளன. எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே பெற்று பயன்பெறலாம்.

மேலும் பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்க தயாராக உள்ள வணிக நிறுவனங்கள் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பணியாளர்கள் ஆகியோர் உரிய அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News