செய்திகள்
கோப்புப்படம்

தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை

Published On 2020-03-28 07:46 GMT   |   Update On 2020-03-28 07:46 GMT
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 8,795 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடமாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 8,795 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி வெளியே சுற்றியதால் 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடையை மீறியதாக 7, 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் 275 வழக்குகள் பதிவாகியுள்ளது. 
Tags:    

Similar News