செய்திகள்
விளக்கு தீபம்

திருமங்கலம் அருகே வீடுகள் முன்பு விளக்கு ஏற்றிய கிராம மக்கள்- கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க வழிபாடு

Published On 2020-03-23 09:58 GMT   |   Update On 2020-03-23 09:58 GMT
கொரோனாவின் பிடியில் இருந்து விடுபடவும், பொது மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி திருமங்கலம் அருகே கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

திருமங்கலம்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ள நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாளுக்கு நாள் அச்சுறுத்தும் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபடவும், பொது மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி திருமங்கலம் அருகே கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், கொரோனா பாதிப்புகளை அரசுடன் சேர்ந்து முறியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருந்தாலும் நமக்கு இறையருள் தேவைப்படும் என்பதால் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டோம் என்றனர்.

வீடுகளில் மஞ்சள் தண்ணீர் தெளித்து வழிபாடு செய்தனர். வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் தீபங்களையும் ஏற்றினர்.

Tags:    

Similar News