செய்திகள்
கூடலூரில் வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ள காட்சி.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கூடலூரில் வீடுகளில் கருப்பு கொடி

Published On 2020-03-21 11:40 GMT   |   Update On 2020-03-21 11:40 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் உள்ள பல பகுதிகளில், வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், ஆதரவு கட்சியினர், பொதுநல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூடலூர் முகையதீன் ஆண்டகை பள்ளிவாசல் ஜமாத் சார்பாக தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் எல்லைத்தெரு, பள்ளிவாசல் தெரு, உசேன்ராவுத்தர் தெரு, மணியம் காமாட்சி ஆசாரி தெரு, கிழக்கு மெயின்பஜார்வீதி, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதி வீடுகளின் வாலில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News