செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் நிலம் வாங்கி தருவதாக ரூ. 48 லட்சம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

Published On 2020-03-17 11:54 GMT   |   Update On 2020-03-17 11:54 GMT
மதுரையில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 48 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை:

மதுரை கே.புதூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் ராஜா. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், மதுரை மாவட்டத்தில் எனது பெயரில் நிலம் வாங்குவதாக எனது மனைவி தமயந்தி, அவரது பெற்றோர் பெரியசாமி-சுமதி, மைத்துனர் ரஞ்சித்குமார் ஆகியோர் என்னிடம் இருந்து ரூ. 48 லட்சத்து 13 ஆயிரம் பெற்றனர். ஆனால் அவர்கள் என் பெயரில் நிலத்தை பதிவு செய்யாமல் மாமனார் பெரியசாமி பெயரில் நிலத்தை பதிவு செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை சிந்தாமணி அழகர் நகரை சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன். இவரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News