செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணி நிறுத்திவைப்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published On 2020-03-12 14:51 GMT   |   Update On 2020-03-12 14:51 GMT
தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.  தற்போது கொண்டு வரப்பட்டுள்ள என்.பி.ஆரில் கூடுதலாக 3 கேள்விகள் உள்ளன.

இந்த கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசின் கடித்திற்கு மத்திய அரசின் பதில் கிடைக்காததால் தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

என்.பி.ஆர் கணக்கெடுப்பின்போது எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. 

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடக்கிறது. என்.பி.ஆர். குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை கொடுக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News