செய்திகள்
திருமாவளவன்

இந்து கோவில்களை அவமதித்து பேச்சு- திருமாவளவன் மீது புதுவை போலீசார் வழக்கு

Published On 2020-03-11 10:40 GMT   |   Update On 2020-03-11 10:40 GMT
புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடந்த 9.11.2019 அன்று புதுவை கம்பன் கலை அரங்கத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் இந்து தெய்வங்களைப்பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். இது, இந்து கோவில்களையும், தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறி இந்து முன்னணி பொதுச்செயலாளர் டி.என். கண்ணன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருமாவளவன் பேசிய இடம் புதுவை என்பதால் பெரம்பலூர் போலீசார் பின்னர் அந்த வழக்கை தமிழக டி.ஜி.பி. மூலமாக புதுவை போலீசுக்கு மாற்றினார்கள்.

அதன் அடிப்படையில் புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News