செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

இம்மாதத்துக்குள் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும்- அதிகாரிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை

Published On 2020-03-11 09:32 GMT   |   Update On 2020-03-11 09:32 GMT
குடிசை மாற்று வாரிய திட்டங்களின் கீழ் இம்மாதத்துக்குள் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

சென்னை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று மாலை வீட்டு வசதித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கடந்த 2011 முதல் 2019 வரை, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் முடிவுற்ற, நடைபெறுகின்ற திட்டங்களின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 319 திட்டப்பகுதிகளில் ரூ.14,347.32 கோடி மதிப்பீட்டில்1,38,362 குடி யிருப்புகள் கட்டும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை துரிதமாக குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கவும் உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.

தற்போது துவங்கப்பட வுள்ள தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள தமனம் பட்டி மற்றும் மேகமலை, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மற்றும் கீரனூரில், சென்னையிலுள்ள மூர்த் திங்கர் தெரு பகுதி 1, ஆலயம்மன் கோவில் பகுதி 2 திட்டப்பகுதிகளில், கட்டுமான பணிகளை வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் துவங்குவதற்கு துணை முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3,04,246 தனி வீடுகள் கட்டும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட வேண்டிய சுமார் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து திட்டப் பகுதிகளுக்கும் வரைபட ஒப்புதல் மற்றும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சென்னை மற்றும் பிற நகரங்களில் பயனாளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் துரிதமாக விற்பனை பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ்லக்கானி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர்.டி.கார்த்திகேயன், இணை மேலாண்மை இயக்குநர் கோபால சுந்தரராஜன், தலைமைப் பொறியாளர்கள் ஆர்.ராஜசேகர், ஆர்.சேதுபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News