செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2020-03-11 01:54 GMT   |   Update On 2020-03-11 01:54 GMT
‘பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது’ என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.
திருச்சி :

திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. வருடம் முழுவதும் 365 நாட்களும் மகளிர் தினம் தான்.

தமிழகத்தில் திருமண வீட்டிற்கு பெற்றோருடன் சென்ற ஒரு பெண் குழந்தை நசுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். எப்படி இந்த மனம் மனித மிருகங்களுக்கு வருகிறது. அதனால் இப்படிப்பட்ட மிருகங்களுக்கு தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

இதில் மனிதாபிமானம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. சில பேர் மனிதாபிமானம் இல்லை என கூறுகின்றனர். மிருகங்களுக்கு என்ன மனிதாபிமானம் என்பது தான் எனது கருத்து. அதனால் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வையுங்கள். அவர்களை கண்காணித்து வளருங்கள். பெண்களின் பாதுகாப்பிற்கு அரசும் கவனமும் செலுத்தி கொண்டிருக்கிறது. நாமும் கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News