செய்திகள்
முக ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-03-10 14:28 GMT   |   Update On 2020-03-10 14:28 GMT
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைப்பால் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலைகளை குறைக்க வேண்டும். இதன்மூலம் பொருளாதாரம் உயரும். 

மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும் அரசுகள், குறையும்போது விலை குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News