செய்திகள்
கோப்புப்படம்

கோவை மாவட்டத்தில் 34,749 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்

Published On 2020-03-04 11:50 GMT   |   Update On 2020-03-04 11:50 GMT
தமிழகம் முழுவதும் இன்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வை கோவை மாவட்டத்தில் 34,749 மாணவ- மாணவிகள் எழுதினர்.
கோவை:

தமிழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.

தனித் தேர்வாளர்களாக 356 பேர் என மொத்தம் 35 ஆயிரத்து 105 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதுகின்றனர்.

பிளஸ்-1 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வையொட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 300 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு நடைபெறும் மையத்துக்கு வந்தனர். 9.45 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

Tags:    

Similar News