செய்திகள்
விபத்து நடந்த பகுதி

அவினாசி அருகே விபத்தில் 19 பேர் பலியான இடம் அபாயகரமான இடமாக அறிவிப்பு

Published On 2020-03-03 04:10 GMT   |   Update On 2020-03-03 05:07 GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே விபத்தில் 19 பேர் பலியான இடம் அபாயகரமான பகுதி (பிளாக் ஸ்பார்ட்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கடந்த மாதம் 20-ந் தேதி கேரள அரசு பஸ்சும், கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:

விபத்து நடந்த இடத்தில் வளைவு எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என ஆய்வு செய்யப்பட்டது. எவ்வளவு கிலோ மீட்டர் தூரத்தில் சர்வீஸ் சாலை உள்ளது. வேகத்தடை உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில் வளைவு தொடங்கும் இடத்தில் வலது புறம் உயரமாக இருக்கும் சாலை, வளைவு முடியும்போது இடதுபுறம் தாழ்வாக உள்ளது தெரிய வந்தது. அதிக பாரத்துடன் வரும் வாகனங்கள் இந்த பகுதியை எப்படி கடக்கின்றது, இலகுரக வாகனங்கள் எவ்வாறு செல்கிறது என்று பார்வையிட்டோம். ஆய்வின் முடிவில் விபத்து நடந்த பகுதி அபாயகரமான பகுதி (பிளாக் ஸ்பார்ட்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து சாலைகளின் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.
Tags:    

Similar News