செய்திகள்
கமல்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலுக்கு போலீசார் சம்மன்

Published On 2020-03-01 13:53 GMT   |   Update On 2020-03-01 13:53 GMT
இந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை:

ஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் ‌ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் கடந்த 19-ந்தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தயதை அடுத்து நடிகர் கமலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் சென்னை வேப்பரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News