திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
பதிவு: மார்ச் 01, 2020 16:59
கமல்ஹாசன்
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்தத் தலைவருமான க.அன்பழகன் உடல்நலம் இல்லாமல் இருப்பதால், தனது பிறந்தநாளைக் கொண்டாடப்போவதில்லை எனவும், ஆகையால் தொண்டர்கள் தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும் சில தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அன்பு சகோதரர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :